கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.. இந்நிகழ்ச்சி மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் தலைவர் ரவி செயலாளர் சண்முகம் பொருளாளர் கணபதி ஆகியோர் தலைமையில் நடந்தது. இப்பேரணியை மாவட்ட துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.. மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் மாநில துணை செயலாளர் கோபு நன்றியுரை கூறினார் இப்பேரணி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் வளாகத்தில் புறப்பட்டு 100க்கு மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து ஊர்வலமாக நான்கு முனை ரோட்டில் வந்து கடலூர் ரோடு, விங்க் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்து முடிவடைந்தது இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தசாமி உதவி ஆய்வாளர்கள் ராமஜெயம் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் மற்றும் . சுதாகர் பழனிசாமி, ராஜா மற்றும் இரண்0 சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச்சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி