உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

 

 உலக மகளிர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார். மகளிர் காவல் நிலையம் சார்பில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சரவணனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். பின்னர் சர்வதேச உரிமைகள் கழகத்தின் துணைத் தலைவர் யுவராஜ் தலைமையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் சிறப்பு உதவி ஆய்வாளர் அஜந்தா மற்றும் போலீசாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர் இதில் மாநில கல்வி அணி இணைச் செயலாளர் சரவணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ராஜேஷ், வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன்,  வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமாள், வேலூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் இம்ரான், ஒருங்கிணைப்பாளர் அசோகன், மாவட்ட இணைச் செயலாளர் ஏழுமலை,மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் பார்த்திபன்,மாவட்ட கல்வி அணி செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரசாந்த், குடியாத்தம் நகர செயலாளர் தினேஷ்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
திருத்தணி,ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
Image
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய இயக்குனர் சசிகுமார் - காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்
Image
25ஆம் தேதி தொடங்க வேண்டிய மதுரை சித்திரை திருவிழா ரத்து
Image
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
Image