திருத்தணி,ஆர்.கே.பேட்டையில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்

ஆர்.கே.பேட்டையில்
ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள்
பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்

ஒருங்கிணைந்த  சாலை உட் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ்  ஆர்.கே,.பேட்டை அம்மையார்குப்பம் சந்திப்பு சாலையிலிருந்து பள்ளிப்பட்டு சாலையில் 930 மீட்டர் நீலம் மழை நீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.1.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதனை அடுத்து நேற்று நடைபெற்ற  பணிகள் தொடக்க விழாவிற்கு  நெடுஞ்சாலைத்துறை  கட்டுமானம் மற்றும்  பராமரிப்புத் துறை பள்ளிப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ர.இன்பநாதன் தலைமை வகித்தார்.  உதவி பொறியாளர் அ.ஞான அருள்ராஜ் வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்தார். இதில், வட்டாட்சியர் சாந்தி, ஒன்றிய ஆணையர் ஸ்டாலின்,  ஒன்றிய குழுத் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன்,  மாவட்ட கவுன்சிலர்  ஜெ.பாண்டுரங்கன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  பலராமன், ஊராட்சி மன்றத் தலைவர்  வேணு உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
படம் : ஆர்.கே.பேட்டையில்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில்  மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்.  


" alt="" aria-hidden="true" /> 


 

Popular posts
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய இயக்குனர் சசிகுமார் - காவல் துறைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்
Image
25ஆம் தேதி தொடங்க வேண்டிய மதுரை சித்திரை திருவிழா ரத்து
Image
பண்ருட்டியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
Image
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
Image